தொடரும் தோழர்கள்

Tuesday, March 27, 2018

ஓரிதழ் பூ - நாவல் விமர்சனம்


அடிங்.....தா இப்ப இன்னத்துக்குடா எம்பொடவகுள்ள பூ தெர்தா, புய்பம் தெர்தான்னு மண்டைய விட்டு பாத்துகினு கீற 

என அகண்ட காலை தூக்கி என் நெஞ்செலும்பு உடைய ஓங்கி ஒரு மிதி மிதித்தாள் துர்கா!


பதறிப்போய் போய் விழித்துப் பார்த்தால் கனவு!


நண்பர் அய்யனார் விஸ்வநாத் எழுதிய ஓரிதழ் பூ நாவல் பற்றி நேற்று பேசிக்கொன்டிருந்தோம் அதன் விளைவாய் தான் இன்று துர்கா கனவில் வந்திருக்க வேண்டும். அய்யனாரை விட்டு விட்டு என் எலும்பை ஏன் உடைக்க வேண்டும்? 


சங்கிகளே! உமக்கு ஒரு ஆடு தயார்!


மனிதர் சேலைக்குள் புகுந்து விளையாடி இருக்கிறார். கருமமே கண்ணாயிருந்து இந்த நாவலை எழுதி முடித்து வெளியே தள்ளியிருக்கிறார். கலவியை வலிந்து திணித்து மூணு வேளை வாய் நிறைய தருகிறார். Irreversible படத்தில் ஒரு காட்சியில் காமிராவை கயிற்றில் கட்டி சுழல விட்டது போல ஒரு காட்சி படமாக்கப்பட்டிருக்கும். அதுபோல மூன்றாவது அத்யாயம் தொடங்கியதும் சுற்றத் துவங்கிய தலை நாவலை படித்து முடித்து ஒரு அரை மணி நேரம் கழித்துதான் சுழற்சி நிற்கிறது. அத்தியாயங்களின் தொடக்கமும் அதே திரைப்படத்தை நினைவுபடுத்துகிறது. 


ஓரிதழ் பூ என தலைப்பு வைத்ததாலா அல்லது நாவலில் நிறைய பூ வருவதலா தெரியவில்லை பூ வை சுற்றியே கதை செல்கிறது. விளிம்புநிலை மக்களின் வாழ்க்கையில் குடி, கலவி தவிர வேறு எதுவும் இல்லை என்கிற நோக்கத்திலேயே கதை பயணிப்பதாக எனக்கு தோன்றுகிறது. நமக்கருகில் அன்றாடம் நிகழும் நிகழ்வை எழுதியுள்ளார் என எடுத்துகொண்டாலும், நமக்கருகில் இவை மட்டும் தான் தினம் நிகழ்கிறதா? 

சரி புனைவு என்றாலும் அதை பெண்ணின் சேலைக்குள்ளும், மாராப்புக்குள்ளும் தான் தேடவேண்டுமா? தேடி லயித்திருக்கிறார் அய்யனார். கலவியை, பெண்ணை வர்ணிப்பதில் இவ்வளவு மெனக்கெடுத்த அய்யனார் கதைக்கும் கொஞ்சம் மெனக்கெட்டு யோசித்திருக்கலாம். 


கானகத்தில், தேநீர் கடையில், புல்வெளியில், ஆசிரம வளாகத்தில், இழவு வீட்டில் என எங்கெங்கு காணினும் கலவியடா என்று முண்டாசு சுற்றியிருக்கிறார் அய்யனார். கதை முழுதும் யாராவது வேஷ்டி அவிழ்ப்பதும், மது புட்டி மூடி திறப்பதும், சீலை ஏறுவதும் அவிழ்வதுமாக நகர்கிறது. எதையாவது அவிழ்த்தால் போதும் கதை நகர்ந்துவிடும் என்று அய்யனார் எண்ணிவிட்டார் போல. அடுத்தமுறை எதை அவிழ்கிறார் என்று பார்க்காலாம்.


ஆவலுடன்
அ. மு. நெருடா.
           

No comments:

Post a Comment